Michael Jackson – The Magician
By Jawahar, 2nd Year Civil Engineering
Scroll to read in Tamil
In the song Billy Jean, a beggar would lie next to a dustbin wherein Michael Jackson would walk by. He would flip the coin into the beggers hand. The coin will fall into the vessel that the beggar holds in his hand. At once the beggar would become very wealthy. This is Michael’s magic.
Michael Jackson performed such magic not only in his songs but also around the world.
In the same song, the scenes are set up as if there were lights everywhere he walked. His songs created such a glow all over the world. Michael Jackson was a Magician who came to alleviate all the wounds of the people of this world. As a singer, dancer, musician, and above all, as a human being, Michael Jackson has made many contributions to the world, but all he experienced in his life were only sufferings. Michael, who appeared whiter than milk in his last years, was born into a black family on August 29, 1958. He was the seventh son of Joe Jackson and Catherine Jackson who lived in The City of Indiana, USA.
In the house of nine children, only poverty flourished. His father was referred to as a cruel man. Any parent giving birth to a child in a black family in the 1960s had no choice but to sacrifice his child to white domination that deprived his son of black rights if they weren’t so harsh on his children. Moreover, Michael’s father Joseph had desired to become a great musician. But his family situation did not permit it. Moreover, despite white domination in all fields at that time, blacks were able to gain some foothold only in the field of music. Joseph dreamt that his sons would reach the top of the field one day. This dream of his belongs to all blacks. But it was cruel that Josephine’s dream had corrupted Michael’s childhood.
He would wake his sons up at 2 a.m. every morning and make them practice music. Even if it’s 10 p.m., if the father says so, everyone should dance. Even if they make a small mistake while dancing, he will beat them with a belt.
Their father had bought good musical instruments for the Jackson brothers, even though they did not have good clothes and good food. Their father formed a band called ‘Jackson Brothers’ with five brothers. Later, the group became known as ‘Jackson 5’. As soon as the committee was started, Joseph began to be harsher than ever before.
The Group of Jackson 5, who returns home from singing at a club in a town at midnight, would go back to a club in another town at 2 a.m. to sing. This hard work of theirs was not in vain. Soon, their popularity began to spread throughout the United States.
Their songs topped the “Billboard Hot 100” list for 4 times.
The first black band to achieve this feat was the Jackson 5. Gradually the poverty of the family had disappeared. More attention fell to Michael Jackson than the other four. As a result, At the age of 9, Jackson got the opportunity to sing on the same stage with a singer ft. Diana Ross, who was then at the height of music worldwide. Recognizing Michael’s talent, She continued to sing with him. She was the first person, who released the first album of Jackson 5. It made Michael Jackson world famous. This led to further growth in love between Michael Jackson and Diana Ross. He began to see Diana as his mother. After his mother, Diana had the right to raise his children, Said Michael Jackson. Michael began to gain popularity over the Group of Jackson 5 but he was never happy with it.
He had sadly expressed this in several interviews later. “My childhood completely destroyed me. No Christmas; There were no birthday celebrations; It was not a formal childhood. I had no joy that a child should have enjoyed. I can’t go back to those seasons no matter what I do.”, he cried
Michael Jackson’s solo release, “Got to be there” was well-received, and Michael’s first album of the same name was released in 1972 when he was only 14. The albums “Ben”, “Music and Me”, and “Forever Michael” released in the same year, were very well received. Meanwhile, Michael Jackson was also performing with the Jackson 5 crew. But “The mouse” which was for the single Michael Jackson, was not available for the Jackson 5.
Four years later, the album “Off the Wall” was released. The songs from the same album, “Of the Wall, She’s Out of My Life, Don’t Stop At You Get Enough, Rock With You”, were among the top 10 hits in the United States. Various awards, including the ‘Grammy Award’ for music, were sought after by Michael Jackson. 1962 was the most important year in the history of music. Michael Jackson’s sixth album ‘Thriller’ has been released. The thriller album set a record that large groups like “The Beatles” did not. Through this, he set foot in continents like Asia, Europe, and Africa. He won 7 Grammy Awards for this album.
After this, Michael Jackson’s live performances were well received in various places. He worked tirelessly in his youth and did it even after he became famous. His dance to the song “Billy Jean” on a live show on March 25, 1983, made everyone dumbfounded. He did the dance move, “Moon Walk”, perfectly. Although many have already tried dance moves like this, no one like him has been able to make it perfect. His “Moonwalk” is still popular even after 25 years.
Rumors began to spread that Jackson, who was seen as a symbol of blacks, felt inferior for being black. They told that that was the reason he turned his face into white. This caused little dissatisfaction among blacks. But in fact, Michael was suffering from vitiligo. Thus white scars appeared on his body. They slowly began to spread up to his face.
So Jackson had undergone plastic surgery in the same color. In 1979, during a rehearsal, he broke his nose after falling down. He had done another plastic surgery to make it smaller. After that, he had to undergo frequent plastic surgeries due to a vitiligo problem. Because of the physical pain, it caused, He had to take more painkillers. It was during this time that the 1987 album “Bad” was released. The album, which has achieved many sales records, featured songs such as “The Man in the Mirror and Smooth Criminal”. It was there that Jackson introduced the world to the dance movement ‘Anti-Gravity Lean’, which challenges gravity. Year after year, the quality of Michael’s performance continued to rise. The album “Dangerous” was released in 1991.
Fans celebrated it by putting it on their heads. After this, Michael’s fans went mad at him. Charlie Chaplin is still remembered around the world today for the politics he spoke of in his films. Like him, Michael put forward various political ideas in his songs. With the song “Beat It”, Michael said, “Be unobtrusive and transgressive”. In his song “Black or White” he not only talks about the atrocities that fathers commit against their children but also “if children are children, there will be no racism and religious bigotry”, Michael proposed. He presented these ideas with artistic sophistication, rather than directly through lines. For example, in the song “Black or White”, the scenes are set as if the whites were shooting the Red Indians. Michael Jackson would be dancing with a girl child at the time. In the same song comes a black panther. In the history of American blacks, the black panther is an indelible mark.
That’s why even the recently released film ‘Black Leopard’ was emotionally taken and celebrated by blacks. At one point, the scenes are set as the black leopard in the song becomes Michael Jackson. Then Michael Jackson, without any background music, would dance for about four minutes. It’s a dance against racism. It’s a dance for blacks and oppressed people. The oppressed saw this dance as Rudra Thandav against Racism.
Even today, the song “They Don’t Really Care About Us” is sung by protesters to make them realize that governments don’t care about the people. Through the song “Heal the World”, he called on people to heal the wounded world but this world only gifted him wounds. Michael Jackson’s childhood and love life did not bring him happiness. Jackson married celebrity Lisa Marie Presley at the age of 34. But the couple divorced within two years. He later married Debby Rowe, who treated him. They had two children, Paris Catherine, and Joseph Jackson. Yes, Michael Jackson named his son after his father. In 1999 the couple got divorced. Debbie Rowe asked for a large sum of money as alimony with the divorce. Michael, who had lost the taste of his childhood due to his father’s strict control, was longing for it. He would have reflected this in his song ‘Childhood’.
Desiring to recapture the joys of his childhood, Michael Jackson set up a children’s amusement park on nearly 2400 acres of land. He only likes children and animals. Various animals were bred and maintained in the park. The park had all the sports like big wheels, swimming pools. He named the park ‘Neverland’. The name says it all, how childish he is. Neverland is a dream world from the children’s adventure story ‘Peter and Wendy’ by J.M. Barie. It is in this story that Peter does many adventures with his friend Wendy. “I love children. I learn a lot while being with them. There are so many problems in this world, whether they are petty crimes in the cities where we live or the big wars, the prisons that are overcrowded with terrorists… it’s all because of the deprivation of their childhood” These words of him, showed the love he had for children. But his pure love was shattered by those around him.
Imman Sandler, who introduced himself as a fan of Michael, filed a lawsuit in 1993 alleging that MJ sexually abused his son Jordan. The media and press began to criticize him. To find out if the signs were on Michael’s body, the guards stripped him naked for half an hour and examined him. Similarly in an interview with a British documentary, Michael Jackson enthusiastically said, “I sleep in the same bed with the children.” But the world, which saw the bed not just as a place to sleep, but as a place to have sex, again recorded a sexual offense against boys against Michael Jackson. Many parents who left their children to play with Michael in Neverland began to ask him for money. For this case, which lasted about three years, Michael Jackson had to spend huge sums. Firstly he mortgaged his land and then sold it. Michael Jackson was later acquitted. But that verdict did not make him happy. Those around him were mentally hurting him. More than the income that came through his songs, his expense kept increasing. Michael Jackson decided that the only way to pay off his debt was to get back on stage. Michael, 50, was announced to be performing at about 50 venues from 2009 to 2010. Almost 10 years later, as Michael Jackson was about to dance, more than a billion tickets were sold out. In order not to deceive his fans, Michael trained hard. A medical team was also appointed to prepare his body for the series. He continued to take painkillers. This was the cause of his death. In fact, only after he died would the pains that this world had caused him to be gone. His death shocked music fans. They left in tears and cried. In many places, people, dancing to his songs, paid their last respects. Prisoners from the Philippines danced to the tune of “Thriller”. The hope and love sown by the artist who saw only pain from his birth to his death have spread all over the world. Beyond TV shows, there are millions of fans dancing even in small villages and towns portraying themselves as Michael Jackson.

பில்லி ஜீன் என்ற பாடலில், குப்பைத்தொட்டியின் அருகில் ஒரு பிச்சைக்காரன் படுத்துக்கிடப்பார். அப்போது அவ்வழியே வரும் மைக்கேல் ஜாக்சன், தனது கையில் இருந்த நாணயத்தைச் சுண்டிவிட, அந்த நாணயம், பிச்சைக்காரன் தனது கையில் வைத்திருக்கும் பாத்திரத்தில் போய் விழும். உடனே அந்தப் பிச்சைக்காரன் மிகப்பெரிய செல்வந்தர் ஆகிவிடுவார். இதுதான் மைக்கேலின் மேஜிக்.
இதுபோன்ற மேஜிக்குகளைத் தனது பாடல்களில் மட்டுமல்லாமல், அதன் மூலமாக உலகெங்கிலும் நிகழ்த்திக் காட்டியவர் மைக்கேல் ஜாக்சன். அதே பாடலில் அவர் நடக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தோன்றுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு பிரகாசத்தையே அவரது பாடல்கள் உலகெங்கிலும் ஏற்படுத்தின. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனையும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனையும் ஒரே புள்ளியில் இணைத்தன. அவர்களது துன்பங்களைத் துடைத்தெறிந்தன. அவர்களுக்கான அரசியலை முன்னெடுத்தன. மொத்தத்தில், இந்த உலகமக்களின் அனைத்து காயங்களையும் போக்கவந்த ஒரு மேஜீசியன் தான் மைக்கேல் ஜாக்சன். ஒரு பாடகராக, ஒரு நடனக் கலைஞராக, இசைக்கலைஞராக, இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு மனிதநேயராக இந்த உலகிற்கு மைக்கேல் ஜாக்சன் ஏராளமான கொடைகளை அளிந்திருந்தாலும், அவர் தனது வாழ்க்கையில் அனுபவித்தவை எல்லாம் துன்பங்கள் மட்டுமே. தனது இறுதிக்காலத்தில் பாலை விட வெள்ளையாகக் காட்சியளித்த மைக்கேல், ஆகஸ்ட் 29, 1958-ஆம் ஆண்டு ஒரு கருப்பினக் குடும்பத்தில் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள Indiana நகரில், ஜோ ஜாக்சனுக்கும், கேத்தரீன் ஜாக்சனுக்கும் ஏழாவது மகனாகப்பிறந்தார். ஒன்பது குழந்தைகள் இருந்த அந்த வீட்டில், வறுமை மட்டுமே செழித்து வளர்ந்தது. அவரது தந்தை ஒரு கொடூரக்காரராகவே குறிப்பிடப்படுவார். 1960களில் கருப்பினக்குடும்பத்தில் பிறந்துவிட்டத் தனது குழந்தையிடம் அவ்வளவு கடுமையாக இல்லாவிட்டால், கருப்பர்களின் உரிமைகளைப் பறிக்கும் வெள்ளையின ஆதிக்கத்திற்குத் தனது குழந்தையை பலி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதுமட்டுமின்றி, மைக்கேலின் தந்தை ஜோசப்பிற்கு ஒரு பெரிய இசைக்கலைஞராக ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவரது குடும்பச்சூழல் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அந்தக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் வெள்ளையின ஆதிக்கம் இருந்தபோதிலும், இசைத்துறையில் மட்டுமே கருப்பர்களால் கொஞ்சமேனும் கால்பதிக்க முடிந்தது. அத்துறையில் தனது மகன்கள் உச்சத்தை அடைய வேண்டும் என்று கனவு கண்டார் ஜோசப். அவரது இந்தக் கனவு, அனைத்துக் கருப்பர்களுக்கும் உரித்தானதாகும். ஆனால் ஜோசபின் அந்தக் கனவு மைக்கேலின் குழந்தைப்பருவத்தைக் கபளீகரம் செய்தது தான் கொடுமை. தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுப்பி தனது மகன்களை இசைப் பயிற்சி மேற்கொள்ளச் செய்வார். அது இரவு 10 மணியாக இருந்தாலும், தந்தை சொன்னால், அனைவரும் நடனம் ஆட வேண்டும். ஆடும்போது, ஆட்டத்தில் சிறு தவறு செய்தாலும் கூட, பெல்ட்டைக் கொண்டு அவர்களை வெளுத்து எடுப்பார். அவர்கள் விளையாட்டு என்பதை வேடிக்கைப் பார்த்து மட்டுமே வளர்ந்தார்கள். ஓய்வு என்ற வார்த்தையைக் கேட்க மட்டுமே செய்து இருந்தார்கள். நல்ல உடை மற்றும் நல்ல உணவு அளிக்காமல் இருந்திருந்தாலும், ஜாக்சன் சகோதரர்களுக்கு நல்ல இசைக் கருவிகளை வாங்கி கொடுத்திருந்தார் அவர்களது தந்தை ஜோசப். சகோதரர்கள் ஐந்து பேரைச்சேர்த்து ‘Jackson Brothers’ என்ற ஒரு இசைக் குழுவை உருவாக்கினார். பிறகு இந்தக் குழு பின்னாளில் ‘Jackson 5’ என பெயர் பெற்றது. இக்குழு தொடங்கப்பட்டவுடன், முன்பைவிடக் கடுமை காட்டத் தொடங்கினார், ஜோசப். நள்ளிரவு ஒரு ஊரில் இருக்கும் கிளப்பில் பாடி விட்டு வீடு திரும்பும் Jackson 5 குழுவினர், மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வேறு ஊரில் இருக்கும் ஒரு கிளப்புக்குச் சென்று பாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களது இந்த உழைப்பு வீண் போகவில்லை. வெகுவிரைவில், அமெரிக்கா முழுவதும் இவர்களது புகழ் பரவத் தொடங்கியது. இவர்களது பாடல்கள் “Bill Board Hot 100” பட்டியலில் தொடர்ந்து 4 முறை முதலிடம் பிடித்தன. இந்தச் சாதனையை செய்த முதல் கருப்பின இசைக்குழு Jackson 5 தான். மெல்ல மெல்ல குடும்பத்தில் வறுமை நீங்கியது. மற்ற நால்வரைக் காட்டிலும், மைக்கேலின் மீதுதான் அதிக கவனம் விழுந்தது. அதன் விளைவாக, 9 வயதிலேயே அப்போது உலகளவில் இசையின் உச்சத்திலிருந்த பாடகி டயானா ராஸ் உடன் ஒரே மேடையில் பாடும் வாய்ப்பு ஜாக்சனுக்குக் கிடைத்தது. மைக்கேலின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட டயானா, தொடர்ந்து அவருடன் பாடத்தொடங்கினார். Jackson 5 இன் முதல் ஆல்பத்தை வெளியிட்டுவரும் இவர்தான். இது மைக்கேல் ஜாக்சனை உலக அளவில் புகழ் பெற்றவராக மாற்றியது. இதனால் மைக்கேலுக்கும், டயானாவுக்கும் இடையே ஆன அன்பு மேலும் வளரத் தொடங்கியது. டயானாவை தன் தாய்க்கு நிகராகப் பார்க்கத் தொடங்கினார், மைக்கேல். தனது தாய்க்கு அடுத்து, தனது குழந்தைகளை வளர்க்கும் உரிமை டயானாவுக்குத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார், மைக்கேல் ஜாக்சன். Jackson 5 குழுவை விட மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற ஆரம்பித்தார். இருப்பினும், அவர் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. இது குறித்து பின்னாளில் அவர் பலமுறை வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். “என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து முழுமையாகப் பறிக்கப்பட்டுவிட்டது. கிறிஸ்துமஸ் கிடையாது; பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கிடையாது; அது ஒரு முறையான குழந்தைப் பருவமாக இல்லை. ஒரு குழந்தைக்குக் கிடைத்திருக்க வேண்டிய எந்த சந்தோஷமும், எனக்குக் கிடைத்திருக்கவில்லை. என்னால் என்ன செய்தாலும் அந்தப் பருவங்களுக்கு மீண்டும் செல்ல முடியாது.”, என்று கூறி அழுதார். அவர் தனியாக வெளியிட்ட ‘Got to be there’ நல்ல வரவேற்பை பெற, 1972-இல் அந்தப் பெயரிலேயே அவரின் முதல் ஆல்பம் வெளியிடப்பட்டது . அப்போது அவருக்கு வயது 14. தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான ‘Ben’, ‘Music and Me’, ‘Forever Michael’ ஆகிய ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையே Jackson 5 குழுவினருடனும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வந்தார் மைக்கேல் ஜாக்சன். ஆனால் தனியான மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்த மவுசு, Jackson 5-க்கு கிடைக்கவில்லை. இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து ‘Off the wall’ ஆல்பம் ரிலீஸ் ஆனது. அந்த ஒரே ஆல்பம்மில் இருந்த ‘Off the wall, She is out of my life, Don’t Stop till you get enough, Rock with you’ , ஆகிய பாடல்கள் அமெரிக்காவின் டாப் 10 ஹிட்ஸில் இடம்பெற்றன.
இசைத்துறையின் உயரிய விருதான கிராமி அவார்டு உட்பட, பல்வேறு விருதுகள் மைக்கேலைத் தேடி வர ஆரம்பித்தன. 1962- ஆம் ஆண்டு, இசை வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். மைக்கேலின் ஆறாவது ஆல்பம் ‘Thriller’ வெளியானது. ‘The Beatles’ போன்ற பெரிய குழுக்கள் செய்திராத சாதனையை, Thriller ஆல்பம் செய்திருந்தது. இதன் மூலமாகத்தான் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா போன்ற கண்டங்களுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜாக்சன். இந்த ஆல்பத்திற்காக 7 கிராமி விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இதற்குப் பிறகு பல்வேறு இடங்களில், மைக்கேலின் லைவ் ஷோக்களுக்கு மவுஸ் ஏறியது. தனது சிறு வயதில் எவ்வாறு ஓய்வின்றி உழைத்தாரோ, அதைப் பிரபலமான பின்னரும் செய்தார். 1983-ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற ஒரு லைவ் பர்ஃபாமன்ஸில் Billy Jean பாடலுக்கு, அவர் செய்த நடன அசைவுகள், அனைவரையும் வாய்பிளக்கச் செய்தன. Moon Walk என்று அழைக்கப்படும் அந்த அசைவைக் கச்சிதமாக செய்துகாட்டியிருந்தார். ஏற்கனவே இது போன்ற நடன அசைவுகளை பலர் முயற்சித்திருந்தாலும், அவரை போல அவ்வளவு கச்சிதமாக யாராலும் செய்து காட்ட முடியவில்லை. அந்த அசைவுகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் பிரபலமாக இருக்கிறது. கருப்பர்களின் அடையாளமாக இருந்த Jackson, தான் கருப்பாக இருப்பதைத் தாழ்வாக நினைக்கிறார் என்ற வதந்திகள் பரவத்தொடங்கின. அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெள்ளையாக மாறியதை ஆதாரமாகக் காட்டினர். இது கருப்பர்கள் இடையே சிறிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் மைக்கேல் விட்டிலிகோ (vitiligo) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது உடம்பில் வெள்ளை நிறத் தழும்புகள் தோன்றின. அவை மெல்ல மெல்ல அவரது முகம் வரை பரவத் தொடங்கின. எனவே ஒரே நிறமாகப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் ஜாக்சன். 1979- ஆம் ஆண்டில், ஒரு பயிற்சியின் போது, கீழே விழுந்ததால் அவரது மூக்கு உடைந்தது. அதையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு சிறியதாக மாற்றிக் கொண்டார். அதன்பிறகு விட்டிலிகோ பிரச்சனையால் அவர் அடிக்கடிப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள வேண்டியிருந்தது. அது ஏற்படுத்திய உடல் வலியின் காரணமாக, அதிக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த சமயத்தில்தான், 1987ஆம் ஆண்டு Bad ஆல்பம் ரிலீஸானது. விற்பனையில் பல சாதனைகளை நிகழ்த்திய, Bad ஆல்பத்தில்தான், ‘The Man In The Mirror, The Smooth Criminal’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில்தான் புவியீர்ப்பு விசைக்கு சவால் விடும், ‘ Anti-Gravity Lean’ என்னும் நடன அசைவை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார். வருடம் வருடம் மைக்கேலின் தரம் கூடிக்கொண்டே போனது. 1991ஆம் ஆண்டு ‘Dangerous’ ஆல்பம் வெளியானது. அதை ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடினர். இதன்பிறகு மைக்கேலின் ரசிகர்களுக்கு, அவர் மேல் பித்துப் பிடித்துவிட்டது. சார்லி சாப்ளினை இன்றும் உலகம் ஞாபகம் வைத்திருக்கக் காரணம், அவர் தனது படங்களில் பேசிய அரசியல். அவரைப்போலவே மைக்கேலும் தனது பாடல்களில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைத்திருந்தார். ‘Beat It’ பாடலில் “அடங்கமறு, அத்துமீறு!”என்ற கருத்தை முன்வைத்தார் மைக்கேல். அவரது “black-or-white” பாடலில், குழந்தைகளை அப்பாக்கள் செய்யும் கொடுமைகளை மட்டுமல்லாமல், ‘குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விட்டால் போதும் இன வெறியும், மத வெறியும் இருக்காது’ என்னும் கருத்தை முன்வைத்திருந்தார். நேரடியாக வரிகளின் மூலம் அல்லாமல், கலை நுணுக்கத்துடன் அக்கருத்துக்களை முன்வைத்திருந்தார். உதாரணமாக, ‘Black or White’ பாடலில் வெள்ளையர்கள், செவ்விந்தியர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருப்பார்கள். அப்போது மைக்கேல் ஜாக்சன் ஒரு குழந்தையுடன் நடனமாடிக் கொண்டிருப்பார். அதே பாடலில் ஒரு கருஞ்சிறுத்தை வரும். அமெரிக்கக்- கருப்பின வரலாற்றில், கருஞ்சிறுத்தை ஒரு அசைக்க முடியாத அடையாளம். அதனால் தான், சமீபத்தில் வெளியான ‘Black Panther’ படத்தைக்கூட, கருப்பின ரசிகர்கள் உணர்வுபூர்வமாக எடுத்துக்கொண்டு கொண்டாடினார்கள். ஒருகட்டத்தில், அந்த பாடலில் வந்த கருஞ்சிறுத்தை மைக்கேல் ஜாக்சனாக மாறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்போது மைக்கேல் ஜாக்சன், எந்தப் பின்னணி இசையும் இல்லாமல் சுமார் நான்கு நிமிடங்கள் ஆடியிருப்பார். அது இனவாதத்துக்கு எதிரான ஆட்டம். தங்களை இரட்சிக்க ஆடப்பட்ட ருத்ரதாண்டவமாகவே ஒடுக்கப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் கருதினர். இன்னும்கூட, அரசுகள் மக்களைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை என்பதை உணர்த்த, போராட்டக்காரர்கள் பாடும் பாடலாக ‘They Don’t Really Care About Us’ பாடல் இருக்கிறது. ‘Heal the World’ பாடல் மூலம், காயப்பட்டுக்கிடக்கும் உலகை ஆற்றுப்படுத்த மக்களை அழைத்தார். ஆனாலும் கூட, இந்த உலகம் அவருக்குக் காயங்களை மட்டுமே பரிசாக வழங்கியது. மைக்கேல் ஜாக்சனின் குழந்தை வாழ்க்கை மட்டுமல்ல, காதல் வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஜாக்சன் தனது 34வது வயதில் பிரபல லிசா மேரி ப்ரெஸ்லீயை மணந்துகொண்டார். ஆனால், இரண்டு ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு, தனக்கு மருத்துவம் பார்த்த டெப்பி ரோவை மணந்துகொண்டார். இருவருக்கும் பேரிஸ் கேத்தரீன் மற்றும் ஜோசப் ஜாக்சன் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். ஆம், தனது தந்தையின் பெயரையே தனது மகனுக்கும் வைத்திருந்தார் மைக்கேல். 1999ஆம் ஆண்டில், இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துடன் மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்டார் டெப்பி. அத்தொகையை மைக்கேல் அளித்த பின்னரும், கடைசிவரை வழக்குப்போட்டுப் பணம் கேட்டபடியே இருந்தார் டெப்பி. தனது தந்தையின் கடுமையானக் கட்டுப்பாட்டால், தனது குழந்தைப்பருவத்தின் ருசியை இழந்த மைக்கேல், அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தார். இதனைத் தனது ‘Childhood’ பாடலில் பிரதிபலித்திருப்பார். தனது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியைத் திரும்பப்பெற எண்ணிய மைக்கேல், கிட்டத்தட்ட 2400 ஏக்கர் நிலத்தில் குழந்தைகளுக்கானக் கேளிக்கைப் பூங்கா ஒன்றை அமைத்தார். அவருக்குப் பிடித்தவை எல்லாம் குழந்தைகளும், மிருகங்களும் தான். அந்தப் பார்க்கில் பல்வேறு மிருகங்களும் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. பூங்காவில் பெரிய ராட்டினங்கள், நீச்சல் குளங்கள் என அனைத்து விளையாட்டுக்களும் இருந்தன. அப்பூங்காவிற்கு அவர் ‘Neverland’ என்று பெயரிட்டார். இந்தப் பெயரே சொல்லும், அவர் எவ்வளவு குழந்தைத்தனமானவர் என்று. Neverland என்பது ஜெ. எம். பேரி எழுதிய ‘Peter and Wendy’ என்கிற சிறுவர் சாகசக் கதையில் வரும் ஒரு கனவுலகம். இக்கதையில் தான், பீட்டர் தன்னுடைய தோழி வென்டியுடன் பல சாகசங்களைச் செய்வார். தன்னைப் பீட்டராகவே பாவித்துக் கொண்டார் மைக்கேல். “நான் குழந்தைகளை நேசிக்கிறேன். அவர்களோடு இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த உலகில் பல பிரச்சனைகளை, அவை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரங்களில் நடக்கும் சிறு குற்றங்கள் ஆனாலும் சரி அல்லது மிகப்பெரியப் போர், பயங்கரவாதம் அளவுக்கதிகமானக் கைதிகளால் நிரப்பப்படும் சிறைச்சாலைகள் ஆனாலும் சரி…..இது எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களிடம் இருந்து அவர்களது குழந்தைப் பருவம் பறிக்கப்படுவது தான்.” அவரது இந்த வார்த்தைகள் குழந்தைகள் மேல் அவருக்கு இருந்த அன்பை எடுத்துக் காட்டின. ஆனால், அவரது இத்தூய அன்பு, அவரை சுற்றி இருந்தவர்களால் உடைக்கப்பட்டது. மைக்கேலின் ரசிகர் என்று அறிமுகமான இம்மான் சான்ட்லர், தனது மகன் ஜோர்டனை, மைக்கேல் ஜாக்சன் பாலியல் ரீதியாகத் துன்புறித்தினார் என்ற குற்றச்சாட்டை, 1993-ஆம் ஆண்டில் முன்வைத்தார். ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவரைத் தொடர்ந்து விமர்சிக்க ஆரம்பித்தன. அந்தச் சிறுவன் சொல்லும் அங்க அடையாளங்கள், மைக்கேலின் உடலில் இருக்கிறதா என்பதை அறிய, மைக்கேல் அரைமணிநேரம் நிர்வாணப்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டார். இதனால் மனரீதியாக ஜாக்சன் பாதிக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத போதும், அவர் இம்மானுக்கு இழப்பீடாக 110 கோடி ரூபாய் கொடுத்திருந்தார். இதனால் அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த பொய்யான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மிகவும் மனம் உடைந்து போயிருந்த மைக்கேல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். மைக்கேலிடம் பணம் பறிப்பதற்காகவே அத்தகையப் பொய்யான வழக்கை இம்மான் தொடுத்தார் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு தொலைபேசி உரையாடல் ஆடியோவும் வெளியானது. பத்து ஆண்டுகள் கழித்து, இம்மான் தன்னைக்கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்றதாக, அவரது மகன் ஜோர்டன் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பு ஜோர்டனுக்குச் சாதகமாக அமைந்தது. அதன்பிறகு மைக்கேலின் மீது வைக்கப்பட்டிருந்தக் குற்றச்சாட்டு, பொய்யானது என்பது மீண்டும் நிரூபணமானது. இதேபோன்று British Documentary ஒன்றில், தனது 13 வயது தோழரான கெவினுடன் பேட்டி கொடுத்த மைக்கேல், “ நான் குழந்தைகளுடன் ஒரே படுக்கையில் படுத்து உறங்குவேன்”, என்று குழந்தைகளுக்கே உரிய குதூகலத்துடன் கூறினார். ஆனால் படுக்கை என்பதை உறக்கத்திற்கான இடமாகப் பார்க்காமல், வெறும் உடலுறவுக்கான இடமாக மட்டுமேப் பார்த்த இந்த உலகம், மைக்கேல் ஜாக்சனின் மீது மீண்டும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றவழக்கைப் பதிவு செய்தது. Neverland-இல் தனது குழைந்தைகளை மைக்கேலுடன் விளையாட விட்ட பல பெற்றோர்களும், அவரிடம் பணம் கேட்கத் தொடங்கினார்கள். சுமார் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கிற்காக, மைக்கேல் பெரும் தொகையை செலவழிக்க வேண்டி இருந்தது. முதலில், தனது நிலத்தை அடமானம் வைத்த அவர், பின்னர் அதை விற்கவும் செய்தார். இதற்குப் பிறகு ஜாக்சன் நிரபராதி எனத் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பு அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள், மனரீதியாக அவரைக் காயப்படுத்தி இருந்தார்கள். அவரது பாடல்கள் மூலம் வரும் வருமானத்தை விட, அவரின் செலவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து, தனது கடனை அடைக்க ஒரே வழி, தான் மீண்டும் மேடை ஏறுவதுதான் என்று முடிவு செய்தார் மைக்கேல் ஜாக்சன். 50 வயதான மைக்கேல், 2009 முதல் 2010 வரை சுமார் 50 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவார் என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்கேல் ஜாக்சன் ஆடவிருந்ததால், டிக்கெட்டுகள் சரசரவென விற்றுத்தீர்ந்தன. தனது ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக, தீவிரமாகப் பயிற்சி எடுத்தார் மைக்கேல். அவரது உடலை இந்தத் தொடர் நிகழ்ச்சிகளுக்குத் தயார்படுத்த, மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டார். இதுவே அவரது இறப்பிற்கும் காரணமாக அமைந்தது. உண்மையில், அவர் இறந்த பின்னர் தான், இந்த உலகம் அவருக்கு ஏற்படுத்திய வலிகளும் போயிருக்கும். அவரது மரணம், இசை ரசிகர்களை அதிரச் செய்தது. கண்ணீர் விட்டு அவர்கள் அழுதார்கள். பல இடங்களில் மக்கள், அவரது பாடல்களுக்கு நடனம் ஆடி மரியாதை செலுத்தினர். அதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறைக் கைதிகள் “Thriller” பாடலுக்கு நடனமாடி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தனது பிறப்பிலிருந்து இறப்பு வரை வலிகளை மட்டுமே கண்ட அந்தக் கலைஞன் விதைத்துச் சென்ற நம்பிக்கையும், அன்பும் உலகெங்கும் பரவி இருக்கிறது. டிவிஷோக்களையும் தாண்டி, சிறு கிராமங்களிலும் நகரங்களிலும் தங்களை மைக்கேல் ஜாக்சனாகப் பாவித்துக்கொண்டு நடனமாடும் கோடானகோடி ரசிகர்களே, அதற்குச் சாட்சி.