KCT-தமிழ் அறிவுத் திருவிழா
நமது குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக தமிழுக்கான ஒரு விழா *தமிழ் அறிவுத் திருவிழா’18*. இந்த முத்தமிழின் சங்கமம் மூன்று நாட்கள் ஜனவரி 19 முதல் 21 வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாள் 1: *மழலைத் தமிழ்*
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான தமிழ் சார்ந்த போட்டிகள்.
இதில் வெவ்வேறு பள்ளிகளைச் சார்ந்த 200 மாணவ மாணவியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
நாள் 2: *தமிழ் பேச்சுத் தொடர்*
பல்வேறு துறை சார்ந்த பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி நம் கல்லூரி மாணவர்களின் செவிக்கு விருந்தளித்தனர்.
பேச்சாளர்கள் விவரம் மற்றும் தலைப்புகள்:
1. டாக்டர்.ஷண்முகம் – வர்மக்கலை
2. திரு.சிவராமன் – தமிழர் உணவு பழக்கங்கள்
3. திரு.ஷான் கருப்புசாமி – தொழில்நுட்ப உலகில் தமிழ்
4. முனைவர்.திருமதி.தனபாக்கியம் – தமிழ்மொழி எனும் விழியாள்
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர் திரு.மகேந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்.
நாள் 3: *டாக்டர்.நா.மகாலிங்கம் சுழற்கோப்பை போட்டிகள்*
மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கான தமிழ் சார்ந்த 16 பல்வேறு போட்டிகளில் தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளிலிருந்து 400 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் நமது கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஜெ.செந்தில் அவர்கள் பங்கேற்றார். மேலும் நமது தமிழ் மன்றத்தின் முன்னாள் மாணவர் திரு.சந்தீப் நாகராஜன் அவர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.