முத்தம்
மதுவிதழ், முகப்பிறை, இதழின் பேதை, இடையின் பாதை,
நின் அழகின் பெதும்பை, இதுவென பாவை;
கண்ணின் முன்னே படர்ந்த தாமரை; யார் அவள் கோதை,
ராமன் தேடிய சீதை;
சடு குடு ஆட கண்களில் தேட விழி முன் நின்று,
கண் சிமிட்டினாயே நீ அன்று;
அம்மணம் பொழிய, இளையமனம் விலக,
எம்மனம் பேசுமோ; அங்ஙனம்
அத்தினமோ நிலவொளியோ சிந்தனை சிதறலோ
இறுவரியில் சொல்வதா அச்சிறு சிற்றின்பத்தை;
மதுவழகே நந்தினி சாயலே உன் மேல் காதல் கொள்ள,
என் உயிர் இறைப்பாயா?