அழிந்து வரும் தமிழர் தற்காப்புக் கலைகளை மீட்டெடுக்கவும், அவை அழியாமல் காக்கவும், மேலும் இளைஞர்களுக்கு தமிழர் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாக கொண்டு குமரகுரு கல்லூரியில் ( ஜூலை 6,7,8 ) போர்த்தொழில் பழகு என்ற பயிற்சிப்பட்டறை நடந்தது.

கேசிடி தமிழ் மன்றம், வாணவராயர் பவுண்டேஷன், நாகம்பதினாறு சிலம்பக்கலைக்கூடம் – பண்ருட்டி, ஆசு சிலம்ப போர்க்கலைக் கழகம் – பாச்சரப்பாளையம், குறுந்தடி பயிற்சிக் கழகம்-அமெரிக்கா, ஆறுமுகம் சிலம்பம் அகாடமி,மலேசியா ஆகியோர் இணைந்து நடத்திய ‘போர்த்தொழில் பழகு’ என்னும் தற்காப்புக் கலைகளுக்கான மூன்று நாள் இலவச பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

குமரகுரு கல்லூரியின் இணைத்தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் மற்றும் திரு. மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகம் மட்டுமல்லாது மலேசியா, கத்தார், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் சிலம்பப் பயிற்சியாளர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசான் டத்தோ ஆ.சிவகுமார்-மலேசியா, கலைநன்மணி மகாகுரு கு.சிதம்பரம்-கீழ்மாம்பட்டு, ஆசான் கு.ராஜதுரை-பாச்சரப்பாளையம்,  ஆசான் பிரபு மதிவாணன், ஆசான் வீரபாண்டியன் ஆகிய பல்வேறு கலை சார்ந்த ஆசான்கள் கலந்துகொண்டனர்.

 

கடவுள்-வழிபாடு

கடவுள் வழிபாடு

 

போர்த்தொழில்-பழகு-1

முனைவர் ஆ.மணவழகன்-இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

 

போர்த்தொழில்-பழகு-2

ஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி- தமிழர்களின் கடல்சார் தொன்மை, மரபுசார் அறிவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியல் ஆய்வாளர், சென்னை

போர்த்தொழில்-பழகு-3

நாகம் பதினாறு கலையை கலைநன்மணி மகாகுரு திரு கு சிதம்பரம், கீழ்மாம்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

 

போர்த்தொழில்-பழகு-4

குத்துவரிசை கலையை பேராசான் டத்தோ ஆ சிவகுமார், மலேசியா, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்

 

முதல் நாள்:

ஜூலை – 6  இனிதே தொடங்கிய போர்த்தொழில் பழகு பயிற்சிப்பட்டறையில் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கடவுள் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில் அதைத் தொடர்ந்து பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசான்களின் குரு வணக்கம் நடைபெற்றது. குரு வணக்கத்தை தொடர்ந்து முனைவர் ஆ.மணவழகன்-இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி- தமிழர்களின் கடல்சார் தொன்மை, மரபுசார் அறிவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியல் ஆய்வாளர், சென்னை, கலைநன்மணி மகாகுரு திரு கு சிதம்பரம், கீழ்மாம்பட்டு மற்றும் பேராசான் டத்தோ ஆ சிவகுமார், மலேசியா ஆகியோர் விழாவை தொடங்கிவைத்தனர்.

அதன்பிறகு பழமையான போர்க் கருவிகளின் கண்காட்சியை குமரகுரு கல்லூரியின் இணைத் தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர், முனைவர் ஆ.மணவழகன் மற்றும் ஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

முனைவர் ஆ.மணவழகன் போரியல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மற்றும் வர்மக் கலையின் சிறப்புகள் மற்றும் பண்புகளை பற்றி திரு ரமேஷ் பாபு (வர்ம ஆசான்), பெங்களூர் விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாள்:

போர்த்தொழில் பழகு இரண்டாம் நாளில் ஆசுக்கலை பற்றியும் வர்மக்கலை பற்றியும் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். ஏறாமல், இறங்காமல் நின்ற இடத்தில் இருந்தே எதிரியை தாக்கி அவனை வீழ்த்திடும் கலை ஆசுக்கலை. அப்படிப்பட்ட இந்த ஆசுக்கலையை  ஆசான் திரு. ராஜதுரை அவர்கள்  மாணவர்களுக்குப்  பயிற்சி அளித்தார்.

தமிழகத்தில் தோன்றிய கலைகளுள் ஒன்றான வர்மக்கலை  உடலின் அழுத்தப் புள்ளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோயைக்   குணப்படுத்தவோ அல்லது எதிரியைத் தாக்கவோ பயன்படுகிறது.வர்மக்கலையின் மருத்துவப்பயன்கள் குறித்து திரு. ரமேஷ் பாபு அவர்களிடம் பயின்றுகொண்ட மாணவர்கள் வர்மக்கலை ஆசான் திரு.ராஜேஷ் ராம்  அவர்களிடம் வர்மக்கலையின் சண்டை முறைகள் குறித்து கற்றுக் கொண்டனர்.

மூன்றாம் நாள்:

மூன்றாம் மற்றும் இறுதி நாளில் திரு. ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் தொன்மை குறித்த விளக்கவுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்று மாலை நடந்த நிறைவு விழாவில் இப்பயிற்சிப்பட்டறையில் மாணவர்களுக்கு கலைகளை பயிற்றுவித்த ஆசான்கள் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.