கற்றல் வாழ்வில் என்றும் சிறந்தது.
அதிலும் நன்கு கற்பது என்பது இன்றியமையாத ஒன்று.இதை தான் வள்ளுவர் அன்றே” கற்க கசடற” என்றார்.அவ்வண்ணமே நம் குமரகுரு தமிழ்மன்றம் மற்றும் நித்திலம் நடத்தும் “கற்கை நன்றே” என்னும் இணையவழி இயங்கலைப் பயிற்சி வகுப்பு நமக்கு தேனிலும் இனிய தமிழ் மொழியை நன்கு கற்கவும் ,அறியவும் வழிவகுக்கிறது.

கல்வெட்டியல் என்னும் சான்றிதழோடு கூடிய இயங்கலைப் பயிற்சி வகுப்பு 8/7/2020-14/7/2020 வரை எழுத்துக்களின் தோற்றம்,தமிழ் பிராமி எழுத்துக்கள்,வட்டெழுத்துக்கள்,கிரந்த எழுத்துக்கள்,நாகரி எழுத்துக்கள் என்னும் பாடத்திட்டத்துடன் நடத்தப்படுகிறது.

கற்கை நன்றே இயங்கலைப் பயிற்சி:

“தமிழுக்கு அமுதென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

இத்தகைய தனித்துவமான முத்தமிழின் தோற்றத்தை அறியாமலே பேசி வரும் எமக்கு தமிழிற்கு அருமையான வரலாறு ஒன்று உண்டு எனவும், எழுத்துக்களின் தோற்றத்தையும்,அத்துடன் பிராமி எழுத்துக்களைப் பற்றி மிக தெளிவாகவும், கற்றுக் கொடுத்து வரும் முனைவர் இரா.ஜெகதீசன் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் மிகவும் அற்புதமான இயங்கலைப் பயிற்சியின் மூன்றாம் நாளைக் கடந்துள்ள நமக்கு கற்றலின் ஆழமும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

வகுப்புகள்:
எழுத்துக்களின் தோற்றத்தை விவரித்தத்துடன்,பழங்கால எழுத்தாம் பிராமி எழுத்துக்கள் கல்வெட்டுகளில் காணப்படும் பழந்தமிழ் அடையாளம் என்பதை நமக்கு உணர்த்தி, பைந்தமிழின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் பயிற்சி வகுப்புகள் காணப்படுகிறது.
நாற்பத்தைந்திற்கும் அதிகமான தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் கலந்துக்கொண்டு இவ்வகுப்பினால் பயனடைவதாக சொல்வது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியே!
இவ்வகுப்பு முத்தமிழாம் தமிழின் மேன்மையை விளக்கும் விதத்தில் தொடரப்படும்.

இணைந்து செயல்பட்டு,முத்தமிழாம் நம் தாய்மொழியைப் பறைசாற்றுவோம்!