“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள் என உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்”

என்று  கலைமகளை வணங்கி கம்பர் பாடிய பாடல் வழி நின்று  அவற்றுள் இடம் பெறும் கட்டடக்கலையின் ஒரு பகுதியாக ” தென் இந்திய கோவில் கட்டிடக் கலை” பற்றிய அரிய செய்திகளாக வழங்கினார் திரு.ஜெயக்குமார் ஐயா.  தென் இந்திய கோவில் கட்டடக்கலையின் அடிப்படை கருத்துகள் தொடங்கி, சிறப்பம்சங்கள் மற்றும் அவற்றின் பல்வேறு தரப்பட்ட வகைகள் என தெளிவான கருத்துக்களை வழங்கினார்.  கோவிலின் நுழைவாயில் தொடங்கி கற்பகிரகம் என்ற கருவறை வரை என பல்வேறு கருத்துக்களையும், மதுரை மற்றும் திருவரங்கம் கோவில் அடிப்படையில் சிறிய வாக இருந்து காலப்போக்கில் பிரம்மாண்ட விமானங்கள் உடைய கோவில்களாக உருவாயின என்றும் மேலும்  சிற்பக் கலையின் வல்லுனர் ஆகிய  கணபதி ஐயா அவர்களின் கருத்தில் ஒன்றான “Temple is not a home of god but it is form of god” என்பதை முன்வைத்தார். மேலும் அன்றைய காலக்கட்டங்கள்  மனிதர்கள் இயற்கையின் வடிவமாக கருதும் ஐம்பூதங்கள் என்றும் கூறும்  நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவற்றை வணங்கியதாகவும் மேலும் குறிப்பாக நாகங்களையும் , நடுகற்கள் என்று போற்றும் நீர் தார் வழிப்பாடுகளையும்  அணங்கு என்ற உருவமில்லாத கடவுள்களையும் வணங்கியுள்ளனர் என்பதை பக்தி இலக்கியங்களின் வாயிலாகவும் சங்க இலக்கியங்களின் வாயிலாகவும் தெளிவான சான்றுகளுடன் விவரித்து கூறினார். தொல்காப்பியர் கூறிய திணைகளின் வழி நின்று அதற்கு உகந்த கடவுள்களை வழிப்பட்டனர் என்றும் கூறினார். வெறியாட்டு என்ற வழிப் பாட்டு முறைகளையும் பாலைத் திணையில் கொற்றவை வழிப்பாடு இருந்தன என்பதை சிலப்பதிக்காரம் (சாலின் பாத்திரம்) விளங்குகிறது என்பதையும் கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கிய காலமாகவும்  அதே சமயம் இந்த காலத்திலேயே கோவில் வளர்ந்து எழுந்த காலமாக இருந்திருக்கிறது என்பதையும் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பக்தியை நிலை நாட்டவும் மேலும் ஆடல், பாடல் என இக்கலைகளை  கோவிலிருந்து பிரிக்கா வண்ணம் அமைய காரணமாக இருந்தவர்களாக குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்நிகழ்வு மிகவும்  ஊடாடும் விதமாக அமைந்தது. தங்களின் அறிவு பசிக்கு விருந்தாக இருந்தது இந்நிகழ்வு என பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின் மாமல்லபுரம் அருகில் சாலு வன்குப்பம் என்ற பகுதியில் பல்லவர் எழுப்பிய முருகன் கோவிலின் செங்கற்களால் ஆன சுவர் பகுதிகள் காணப்படுகிறது. மேலும் இக்கோவிலே தொன்மையான கோவில் என் நிரூபிக்க தொல்துறை யின் சத்தியமூர்த்தி அவர்கள் அறிக்கையை சமர்பித்து உள்ளார் என்ற செய்தியையும் குறிப்பிட்டார். மேலும் கோவில்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, திராவிடா, வேசரா மற்றும் நாகரா என்றும் முற்காலத்தில் கருங்கற்களால் கோவில்கள் இல்லை என்பதையும் செங்கல்கள், மரங்கள், உலோகங்கள் மற்றும் பாறைகளை பயன்படுத்தி கோவில்களை கட்டியுள்ளனர் என்பதையும்  பல்லவர், பாண்டியர்கள் பெரும்பாலும் குடவரைக் கோவில்களை உருவாக்கினர் . புத்த கோவில்களும் இடம் பெற்றுள்ளன என்பதைவும் பெரும்பாலும் அவை “கோட்டம்” என்றே அழைக்கப் பெற்றுள்ளது. சான்று – (மணிமேகலை ) விஜயவாடாவில் உள்ள உண்டவல்லி கோவில் பழமையான ஒன்றாகும். மேலும் முற்காலத்தில் கோவில் பெரும் அளவில் இல்லை என்பதையும் பக்தி இலக்கியக் காலங்களிலேயே கோவில் வளர்ந்து வளர்ச்சியடைந்து உள்ளது .
தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவே நம்மால் வரலாறுகளை அறியவும் அவற்றின் பின்னணியையும் தெளிவாக அறிய உதவியாக அமைகிறது.
முக்கியமாக – (சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ).