கைப்படாத தூரிகையால் மையிடாமல் தீட்டிய ஓவியம், காக்கும் தாயான காவியம், இயற்கையிலோ ஆச்சரியங்கள் ஏராளம்! அவற்றில் ஒன்று – வீரத்தின் வடிவாய், கம்பீரத்தின் காட்சியாய், சாதூர்யத்தின் சாட்சியாய் ராஜநடையிடும் புலிகள்.

அப்புலிகளின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவது குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், புலிகளின் இனத்தை அழிவிலிருந்து காக்கவும் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலக புலிகள் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு, ரஷ்யாவில், 13 நாடுகளால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிப்பு கையெழுத்திடப்பட்டு, இந்த தினம் நடைமுறைக்கு வந்தது. இவ்வாண்டு, ஒரு மாறுபட்ட சூழலில் இத்தினத்தை Microcosm, Kumaraguru Nature Club, குமரகுரு தமிழ் மன்றமும் இணைந்து இணையத்தில் சிறப்பாய் அனுசரித்தனர். “காணுறை வேங்கை” என்ற தலைப்பில் நடந்த இணைய உரையில், புலிகளின் தோற்றம், உணவு பழக்கம், சிறப்பம்சங்கள், புலிகள் பற்றிய இலக்கிய குறிப்புகள், என அனைத்து செய்திகளையும் சூழலியல் களத்தில் பணிபுரியும் சிறப்பு விருந்தினர்களான முனைவர் .இரவிச்சந்திரா மற்றும் கிருஷ்ண குமார் ஐயா, விவரித்து, தங்கள் ஆய்வுகள், சிரமங்கள், என அனைத்து தனித்துவமான செய்திகளையும் பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர்.