தாயேதாரகையேகர்ப்புப் புதல்வியே

வெள்ளிச் சலங்கை அணியும் கண்ணகியே

நின் இரு கால்களுக் கிடையில் பிறந்த

யென்னைக்கொஞ்சி வளர்த்த என் இருதயக் குவையே;

 

பௌர்னமி பார்வையில் இருள்படர்ந்த வேலையில் பெற்றெடுத்தவளே,

இச்சையாக எச்சையும் நின்னமிர்தமாக எனக்கு ஊட்டியவளே,

நின் மார்பின் குருதியைக் குடித்து வளர்ந்தவன் நான்:

உன் கண்களை என்னிரு விழிகளால் காண்பாயோ!

 

நீர் இல்லா வேலையிலும் பசியை ஆற்றினாயே;

நீ உறங்கும் வேலையிலும் எனது உரக்கத்தை என்னினாயே;

கர்பையில் இடமொதுக்கி மார்பில் தாரை வார்த்தாயே,

என் தலைப்பாகைப்போல் சுமப்பேன் உன்னை,

 

இதுவரை எனக்குத் துரோகத்தைக் காட்டாதவளே

இரு விழிகளில் உன் அழகினைக் கூருவேனோ

நான் உன் கர்ப்பினை எடுத்துறைப்பவன்

உன் மனாலனின் நிழலால் ஆனவன்

உனது மைத்துனக் காதலின் சத்தியச்சொல்

 

அவருக்குத் தாரம் நீதாசியாய் பனிவினை செய்தாயோ

இரவில் கர்பம் தரிக்கமசக்கையோடு திரிந்தவளே

இடையில் சுமந்த பாரம் இரக்க நேரம் உண்டோ

வலையல் அணிந்து ஊரைக் கூட்டினாய்

எனக்கெனக் கர்ஜிக்க என்னுள் ஒன்று இருப்பதென்று.

 

அவரின் வீரத்தை ஊட்டியவளேதாயே

பாசத்தால் பனி உரைய செய்தாயே;

தமையனின் அன்பை பகிர வைத்தாயே,

சிறு தங்கையிடம் எனன்பினைப் பொழியச் செய்தாயே;

 

பிச்சை எடுத்து அறிவைப் பூக்கியவளே

வியர்வை சிந்தி சோர்வை விலக்கினாயோ!

இவள் தான் என் தாயோ என்றுணர்தியவளே

உன் ஆற்றல் அனைத்தையும் உரித்துக் கொடுத்தயோ!

 

உன் செவி ஓரம் என் கன்னம் உரச,

நான் துயில் கொள்ளஉன் தாலாட்டுக் கேட்க,

எந்தன் வாழ்வாக உந்தன் கனவு அமைய,

உன் இரு இதழால் என் கன்னம் சிவக்குமோ…..

Written by,  SAPPHIRE KRISH